திருப்புத்தூர் : கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது. ஏப்.,15ல் காப்புக்கட்டி பத்து நாள் சித்திரைத் திருவிழா துவங்கியது. தினசரி, இரவில் அம்மன், பூத,சிம்ம, அன்ன,காமதேனு, யானை, ரிஷப,குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எட்டாம் நாள் திருநாளான்று மாணிக்கநாச்சியம்மன் தேரில் மூலஸ்தானம் வந்தார்.ஒன்பதாம் திருநாளில், பால்குடம் எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் நிறைவாக அம்மனுக்கு தீபாராதனை, தீர்த்தவாரி நடந்தது.