பாகூர் கன்னியகோவிலில் 3ம் தேதி சைவ சித்தாந்த மாநாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2014 01:04
புதுச்சேரி: பாகூர் கன்னியகோவிலில், சைவ சித்தாந்த மாநாடு வரும் 3ம் தேதி நடக்கிறது. திருவாரூர் சிவனடியார் நற்பணி மன்றம் சார்பில், கன்னியகோவில் அன்னை உண்ணாமலை பெரியசாமி கவுண்டர் வணிக வளாகத்தில், வரும் 3ம் தேதி சைவ சித்தாந்த மாநாடு நடக்கிறது. திருமுறை இன்னிசையுடன் மாநாடு துவங்குகிறது. மன்ற தலைவர் அனந்தராமன் தலைமை தாங்குகிறார். சபா தலைவர் அலமேலு, இணை பொதுச் செயலாளர் பஞ்சவர்ணம், மகாலிங்கம் முன்னிலை வகிக்கின்றனர். பொதுசெயலாளர் சிவானந்தம், பொருளாளர் கலாவதி கருத்துரையாற்றுகின்றனர். செயற்குழு உறுப்பினர் ராணி ஆண்டறிக்கை வாசிக்கிறார். வாமதேவசிவம் அறக்கட்டளை நிறுவனர் மேன்மைகொள், சைவநீதி விளங்குக உலகமெலாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டு தீமானத்தை மகளிரணி செயலாளர் அமுதா வாசிக்கிறார். கடலுார் மாவட்ட தம்பிப்பேட்டை விஜயகுமார சுவாமிகள் சிவசுந்தரம் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றுகிறார் நிர்வாக செயலாளர் தியாகராஜன் நன்றி கூறுகிறார்.