காஞ்சிபுரம்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலின் கொடுமையைத் தணிக்க வேண்டி காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1008 இளநீர் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.