பழனி ; திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருள்மிகு பழனிமுருகன் தீர்த்தக்காவடி குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கடந்த வியாழக்கிழமை மாலை உடுமலை ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருந்து கொடுமுடி சென்று அங்கு காவிரிஆற்றில் தீர்த்தம் முத்தரித்து விட்டு நேற்று மகாயாக வேள்விபூஜை நடந்தது. தீர்த்தக்கலசங்களுக்கும் பூஜை நடத்தப்பட்டது. மாலையில் கலசங்கள் மேளதாளம், செண்டை வாத்தியம் முழங்க கிரிசுற்றப்பட்டு மெய்யார் பூஜையுடன் நிறைவு பெற்றது. இன்று (ஏப்.28) கந்தசஷ்டி பாராயணம் செய்யப்பட்டு காவடிகள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.