கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மங்கலம் பேட்டையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது எடைச்சித்தூர் அய்யனார் கோயில். இந்த அய்யனாருக்கு வேண்டிக்கொண்டு, இங்குள்ள கல் யானைக்கு அபிஷேகம் செய்தால் பக்தர்களின் குறை தீர்கிறது என்கிறார்கள். எனவே, பணம், பொருள், நிலம் என ஏமாற்றம் அடைந்தவர்கள், இவரிடம் முறையிட்டு தீர்வு காண்கிறார்கள்.