திருப்புவனம் : திருப்புவனத்தில் மழை வேண்டி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் வருண ஜெபம் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாததால் வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் கீழே போய்விட்டதால் குடிநீர் கிணறுகள் வற்றி வருகிறது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான். தொடர்ச்சியாக மழையில்லாததால் நேற்று காலை 5.55 மணிக்கு திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தர நாயகியம்மன் ஆலயத்தில் வருண ஜெபம் நடத்தப்பட்டது. அதிகாலை 5மணிக்கு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.கோயில் முன் வருண ஜெபத்திற்காக சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது.பூஜைகளை செண்பக பட்டர், பாபு பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலிலும் வருண ஜெப பூஜை நடந்தது. வருண ஜெப பூஜை கண்ணன் பட்டர், விக்னேஷ் பட்டர், செந்தில்பட்டர் ஆகியோர் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, அறங்காவலர் ராஜாங்கம் தலைமையில் ஏராளமான பக்தர்கள் வருண ஜெப பூஜையில் பங்கேற்றனர்.