பதிவு செய்த நாள்
30
ஏப்
2014
12:04
விழுப்புரம் : விழுப்புரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 4ம் தேதி அம்மன் அலகு நிறுத்தும் விழா நடக்கிறது. விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, சித்திரை மாதத்தை முன்னிட்டு, சிறப்பு பண்டிகை நடக்கிறது. வரும் 3ம் தேதி, காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், சவுடேஸ்வரி அம்மனுக்கு மூலிகை சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை, அன்னம் விரையம் செய்தல் மற்றும் பண்டாரி இடித்தல் நடக்கிறது. 4ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காப்பு கட்டுதல் நடக்கிறது. விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், சக்தி கரக ஆராதனையும், பின் தேவாங்கர் சமூகத்தினர் நெஞ்சில் வாள் ஏந்தி, நெடுஞ்சாலை வழியாக சென்று, அம்மன் கோவிலில் அலகு நிறுத்தம் செய்யப்படுகிறது. மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை, அன்னம் விரையம் செய் தல் மற்றும் இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடு களை ராமலிங்க சவு டேஸ்வரி அம்மன் கைங்கர்ய டிரஸ்ட் மற்றும் தெலுங்கு தேவாங்கர் சமூக நலச் சங்கத்தினர் செய்து வருகின்றனர்