வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலுக்கு, வெப்சைட் துவக்கவிழா நடந்தது. இக்கோயில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவரால் கட்டப்பட்டது. பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். இங்கு மூலவராக வீற்றிருக்கும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் அருள்பாலிக்கிறார். இங்கு பாரம்பரியமாக நடந்து வந்த திருவிழாக்கள் காலப்போக்கில் ஒவ்வொன்றாக நின்றுபோயின. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலை சேர்ந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து "சேவா சமிதி டிரஸ்ட் என்ற அமைப்பின் கீழ் , பலலட்சம் மதிப்பில் கோயிலை புனரமைத்தனர். அதன்பின் நின்றுபோன திருவிழாக்கள் அனைத்தும் நடந்து வருகின்றன. தற்போது, வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் கோயில் திருவிழாக்கள், மற்ற நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில், இக்கோயிலுக்கான "வெப்சைட் துவக்கப்பட்டது. இதற்கான விழா டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணன், புதிய "வெப்சைட் ஐ துவக்கி வைத்தார். தீதீதீ.ண்ஞுtடதணச்ணூச்தூச்ணச்ணீஞுணூதட்ச்டூ.ணிணூஞ், "ஓம் நமோ நாராயணா என்ற ஸ்லோகத்துடன் துவங்கி கோயில் ஸ்தலவரலாறு, திருவிழாக்கள், பல்வேறு அலங்காரத்தில் சுவாமி, மற்றும் தாயார்களின் படங்கள் தோன்றுகின்றன. கூடியிருந்த பக்தர்களுக்கு திரையில் காண்பிக்கப்பட்டது. பொருளாளர் அழகர் நன்றி கூறினார்.