திருப்புல்லாணி கோயிலில் மே 5ல் சைத்ரோத்ஸவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2014 12:05
கீழக்கரை: திருப்புல்லாணி பட்டாபிஷேகராமன் சுவாமி கோயிலில் சைத்ரோத்ஸவ விழா மே 5ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சுவாமி கோயில் 108 வைணவ சேஷத்ரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாஸாசனம் செய்யப்பெற்றதாகும். ஆண்டு தோறும் இங்குள்ள பட்டாபிஷேகராமன் சுவாமி கோயிலில் சைத்ரோத்ஸவ விழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டில் மே 5ல் கொடியேற்றம்,மே 8ல் கருடசேவை, மே 10ல் திருக்கல்யாணம், மே 13ல் தேரோட்டம், மே 14ல் தீர்த்தவாரி, ஏப்.,15ல் காலை சீதா, லட்சுமருடன் ஸ்ரீராமர் சுவாமி வானமாமலை மடத்திற்கு எழுந்தருளுதல் நடைபெறுகிறது. ஏப்., 5 முதல் 14 வரை காலை மற்றும் மாலை நேரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாக செயலாளர் மகேந்திரன், கோயில் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.