மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திருத்தலம் திருச்சிறுபுலியூர். ஒரு காலத்தில் ஆதிசேஷன் இத்தல பெருமாளை நோக்கி தனக்கும் கருடனுக்கும் இருக்கும் பகைமை தீர வேண்டும் என பிரார்த்தித்தார். பெருமாளும் ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்து அவரது வேண்டுதலை நிறைவேற்றினார். அத்துடன் ஆதிசேஷன் மடியில் பால பெருமாளாக குழந்தை வடிவில் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் 108 திருப்பதிகளில் இவ்வளவு சிறிய பெருமாளை கிடந்த கோலத்தில் தரிசிக்க முடியாது. இத்தலத்தில் தான் ஆதிசேஷன் பிரமாண்ட வடிவில் தனி கோயில் கொண்டு விளங்குகிறார்.