சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 12:05
சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில், சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சின்னமனூரில் வரலாற்று சிறப்பு பெற்ற, செப்பேடுகள் புகழ் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா, இன்று (03.05.2014) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பகல் 11 முதல் 12 மணிக்குள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற விழா நடைபெறும். தொடர்ந்து இம்மாதம் 20 ம் தேதி வரை, தினந்தோறும் அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படியுடன் திருவிழா, சுவாமி நகர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இடையில் 10 ம் தேதி சிவகாமி அம்மன்-பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியும், 11, 12 ம் தேதிகளில், தேர்த் திருவிழாவும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ரம்ய சுபாஷினி, தக்கார் சுரேஷ், கணக்கர் மோகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.