தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 12:05
தூத்துக்குடி: தூத்துக்குடி அன்னை பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா, இன்று (மே 3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 12 ல், தேரோட்டம் நடக்கிறது. இன்று காலை துவங்கும் சித்திரை திருவிழாவையொட்டி, காலை 6:15 மணிக்கு யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடக்கிறது. காலை 10:30 க்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளும்,இரவு 8:00க்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியுலாவும் நடக்கிறது. மே 4 ல், காலை 10:00 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7 வது நாளில் காலை உருகு சட்ட சேவையும், மதியம் 12:00 மணிக்கு நடராஜபெருமானுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு சிவப்பு சாத்தியும், அதிகாலை 1:00 மணிக்கு வெள்ளை சாத்தி வீதியுலா நடக்கிறது.10 ம் நாள் திருவிழாவான மே 12 ல், காலை 9:30க்கு சங்கர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.