குன்றத்திலிருந்து முருகப் பெருமான் மதுரைக்கு 9-ம் தேதி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 02:05
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தில் (பெற்றோரது திருமணத்தில்) பங்கேற்க வரும் மே 9 ம் தேதி திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், மதுரைக்கு புறப்பாடாக உள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் வரும் 10 -ம் தேதி (சனிக்கிழமை)நடைபெறுகிறது. இத்திருமணத்தில் பங்கேற்க வரும் 9-ம் தேதி மாலை தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும், தாரை வார்த்துக் கொடுக்க அருள்மிகு பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு புறப்பாடாக உள்ளனர்.