செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பந்தகால் நடும் விழா நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம், மூன்று நிலை வாயிற் கோபுரம், 18 சித்தர் சிலைகளுடன் கூடிய தியான மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி விழாவுக்கான பந்த கால் பூஜை நேற்று காலை நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், திருப்பணிக்குழு உறுப்பினர் செல்வம், அண்ணாதுரை, ஆசிரியர்கள் ராமமூர்த்தி, ஜெயக்குமார், பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.