பதிவு செய்த நாள்
05
மே
2014
11:05
விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஓ., நகரிலுள்ள, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு அலகு நிறுத்தும் விழா நேற்று நடந்தது. விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி..ஓ., நகரிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி கோவில், அம்மன் பண்டிகை விழா, கடந்த 3ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சவுடாம்பிகை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காப்பு கட்டுதல் மற்றும் பண்டாரி இடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சக்தி கரகம் அழைத்தலும், அதனை தொடர்ந்து விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டிலுள்ள விநாயகர் கோவில் வளாகத்திலிருந்து, தேவாங்கர் சமூக இளைஞர்கள், நெஞ்சில் வாள் தாங்கி, ஊர்வலமாக புறப்பட்டனர். கோவிலை அடைந்ததும், சவுடாம்பிகை அம்மனுக்கு அலகு நிறுத்துதல் நடந்தது. ஜோதி மாவு அமைத்தலும், வழிபாடும் நடந்தது. மாலை சவுடாம்பிகை அம்மன் மற்றும் ஸ்ரீஜோதி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கைங்கர்ய டிரஸ்ட் மற்றும் தெலுங்கு தேவாங் கர் சமூக நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.