மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா உத்தமர் கோ வில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றானதாக விளங்கவதும், மும்மூர்த்திகள் தமது முப்பெரும்தேவியருடன் எழுந்தருளியுள்ள சிறப்புமிக்க ஸ்தலமாகவும் விளங்குவது உத்தமர் கோவில்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் புருஷோத்தம பெருமாள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் 12ம் தேதி நடக்கவுள்ளது.நேற்று காலை 11 மணியளவில் கொடிப்படம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சூர்யபிரபை, அனுமந்த வாகனம், கருடவாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேரோட்டம் மே 12ம் தேதி காலை 9.45 மணியளவில் நடக்கவுள்ளது.திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் (பொ) பாரதிராஜா, காசாளர் சாய்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.