ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் பந்தக்கால் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 11:05
பெரம்பலூர்: திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் அருகில் ரூ.3 கோடியில் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கட்டுமான பணிக்கு கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. பின்னர் கட்டுமான பணி துவங்கி தற்போது முடிவுற்றுள்ளது. இக்கோவிலில் மார்பிள் ஸ்டோனால் செய்யப்பட்ட சாய்பாபா முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பந்தகால் முகூர்த்த சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து பந்தகால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா டிரஸ்ட் நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா, இயக்குநர்கள் அனுப்பிரியா, அனுசியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.