மதுரை மீனாட்சி சித்திரைத்திருவிழா: 5ம் நாளில் ...!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2014 12:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 10ல் நடக்கிறது. இக்கோயில் திருவிழாக்களில், சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. திருவிழா நடக்கும் நாட்களில் அம்மனும், சுவாமியும் தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் உலா வருகின்றனர். சித்திரைத்திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, பிரியாவிடையுடன் சுவாமி, அம்மன் தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.