திரவுபதியம்மன் கோவிலில் ரூ. 25 லட்சம் மதிப்பில் திருப்பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2014 12:05
தியாகதுருகம்: முடியனூர் திரவுபதியம்மன் கோவில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தியாகதுருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். இக்கோவில் சேதமடைந்த நிலையில் இருந்ததால் பக்தர்கள் முயற்சியால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன் செப்பனிடும் பணிகள் துவங்கியது. இதற்காக நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம், மூலவர் விமானம், விநாயகர் சன்னதி ஆகியவை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்குள் திருப்பணியை முடித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்து பணிகள் நடக்கிறது. நூற்றாண்டு பழமையான திரவுபதியம்மன் கோவில் புதுப்பிக்கப்படுவதால், இப்பகுதி பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.