திருப்பத்தூர் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள மதியாதகண்ட விநாயகர், அழகுசெüந்தரி அம்பாள் கோயிலில் மகாசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து இரவு 7 மணிக்கு 64 பைரவர் பூஜையும், சுவாமி கும்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சரஸ்வதிராமநாதனின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. 2 ஆம் நாள் முதல் கால பூஜை, மகாபூர்ணகுதியும், தீபாராதனையும் நடைபெற்றது. 51 பசுக்கள் பங்கேற்ற கோ பூஜை , யானைகளுக்கு கஜபூஜை, சுமங்கலிபூஜை, கன்னியாபூஜை, வடுகபூஜை, பிரம்மச்சாரியபூஜையும் இறுதியாக 13 அத்தியாயங்களுடன் பூர்ணாகுதி நிகழ்ச்சி, மற்றுறம் மகாசண்டியாகம் நடைபெற்றது.