Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடியார்களை தாய்போல் காப்பவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க திருவொற்றியூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க திருவொற்றியூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

26 நவ
2026
03:11

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு வைபவம், இன்று இரவுடன் நிறைவடைகிறது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


சென்னை, திருவொற்றியூர் – தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆதிபுரீஸ்வரரின் புற்று திருமேனி மீது, தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்டு இருக்கும். ஆண்டுக்கொரு முறை, திருக்கார்த்திகை தீபத்தையொட்டி, மூன்று நாட்கள் மட்டும் கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுக்கு பின், கவசம் திறக்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கும் மேல் கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். அபிஷேகம் செய்யப்பட்ட புணுகு சாம்பிராணி தைல திருச்சாந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான நேற்றும், சென்னை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கட்டணமில்லா தரிசனத்திற்கு இம்முறை இரு வரிசைகளை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி இருந்ததால், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில், ஆதிபுரீஸ்வர் கவசம் திறப்பு வைபவம், மூன்றாம் நாளான, இன்று இரவு, 9:00 மணியுடன் நிறைவடைகிறது. அர்த்தஜாம தைலாபிஷேகத்திற்கு பின், மூலவருக்கு நாக கவசம் அணிவிக்கப்பட்டு விடும். இனி, கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பதால், கடைசி நாளான இன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar