குரு என்றாலே நவக்கிரகங்களில் ஆண்டுக்கொடு முறை பெயர்ச்சியாகும் நவக்கிரககுருவை மட்டுமே நினைக்கிறோம் வைணவ சம்பிரதாயத்தில் முதல்வராகவும், மூன்றாவது குருவாகவும் இருப்பவரை பற்றி தெரியுமா ? சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபடுவோம். விநாயகர் நம் செயலில் ஏற்படும் தடைகளை நீக்குவதால் விக்னேஷ்வரர் எனப் பெயர் பெற்றார். இதேபோல், பெருமாள் ஆலயங்களில் விஷ்வக்ஸேனரை முதலில் வழிபடுவர். உலகைக் காக்கும் பெருமாளுக்கு வலது கையாக இருப்பவர் இவர். விஷ்ணுவின் படைகளுக்கெல்லாம் தலைமை வகிப்பவர் என்பதால், சேனை முதலி எனப் பெயர் பெற்றார். முதலி என்றால் முதல்வர் அல்லது முதன்மையானவர் எனப் பொருள்படும். விஷ்வக் என்பதற்கு எங்கும் என்பது பொருள். எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய படையை வைத்திருப்பதால் விஷ்வக்ஸேனர் எனப்போற்றப்படுகிறார். வைணவ குரு பரம்பரையில், திருமால் திருமகளுக்கு மந்திர உபதேசம் செய்தார். எனவே அவரே முதல் குரு ஆகிறார். திருமகள் இரண்டாவது குரு. அவள் விஷ்வக்ஸேனருக்கு மந்திரம் உபதேசித்தாள். எனவே இவளிடம் படித்த விஷ்வக்ஸேனர் மூன்றாவது குருவாக போற்றப்படுகிறார்.