பார்வதிதேவியால் உருவாக்கப்பட்ட விநாயகர், சிவத்தலங்களில்தான், காட்சி தருவார். பெருமாள் கோயில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் இருப்பார். அரிதாக சில பெருமாள் தலங்களில் விநாயகரே இருக்கிறார்.சீர்காழி அருகில் திருமணிக்கூடத்தில் விநாயகர் தெற்கு நோக்கி, சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரை, நாலாயிரத்தொரு விநாயகர் என்று அழைக்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் தலைக்குள் சென்று விடும் என்கிறார்கள். இதேபோல் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமோகூர் காளமேகப்பெருமாள், மதுரை தெற்குமாசிவீதியிலுள்ள நவநீத கிருஷ்ணர் கோயில், சென்னை மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயில், கோவை மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளிட்ட சில தலங்களிலும் விநாயகர் இருக்கிறார்.