கும்பகோணம் : கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி கோயிலின் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா நேற்று (மே 5) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளியவுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு பெருமாள் உபய நாச்சியார்களுடன் வெள்ளி இந்திர விமானத்தில் வீதிப்புறப்பாடு நடைபெற்றது.மே 21ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழா நாட்களில் பெருமாள் உபயநாச்சியார்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.