பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
கன்னிவாடி : கோனூரில், மழை வேண்டி நடந்த கிராம பூஜையில், சப்தகன்னிகளுக்கு வாழைப்பழங்களை சூறையிடப்பட்டன. போதிய மழையின்றி, இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. சில மாதங்களாக, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில், மழை வேண்டி கிராம மக்கள் சார்பில், கூட்டு வழிபாடு நடந்தது. முன்னதாக, கிராம அழைப்பு நடத்தப்பட்டு, சாரங்கபாணி கோயில், வீருநாகம்மன் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. வாழைப்பழக்குவியலுடன், கண்மாய் பகுதியில் சப்த கன்னிக்கான வழிபாடு நடைபெற்றது. பின்னர், வாழைப்பழங்களை சூறையிட்டு நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழங்கள் சூறையிடலுக்குப்பின், பக்தர்களுக்கு வாழைப்பழ பிரசாதம் வழங்கல் நடந்தது.