பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
பழநி : பழநி மலைக்கோயில் அடிவாரப்பகுதியில், பலத்த காற்று வீசியதால், "ரோப்கார் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு, பக்தர்கள் மூன்று நிமிடத்தில் செல்லும் வகையில் "ரோப்கார் காலை 7 முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படுகிறது. மலைஅடிவாரப்பகுதியில் பலத்தமழை மற்றும் காற்று வீசும்போது, பக்தர்களின் பாதுகாப்பைக்கருதி "ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.அதன்படி, நேற்று பகல் 3.30 மணியளவில், மலைஅடிவாரப் பகுதியில் 40 கி.மீ., முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்றுவீசியது, மாலை 5.30 மணியளவில் சாரல் மழைபெய்ந்தது. இதனால் மாலை 6.45 மணி வரை, "ரோப்கார் இயக்கப்படவில்லை. மீண்டும் 30 கி.மீ., வேகத்திற்குள் காற்றுவீசியபோது "ரோப்கார் இயக்கப்பட்டது. "ரோப்கார் சரியாக இயங்காத காரணத்தால், வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் அதிகபட்சமாக 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.