திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்ச்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் முதல் நாள் காலை 7 பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வசந்த மண்டபம் எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. வசந்த மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடக்கும் விழாவின் நிறைவாக வரும் சித்ரா பவுர்ணமி அன்று மன்மத தகனம் நடக்கிறது.