பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில், சித்திரை தேரோட்ட விழா, நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருச்செங்கோடு அடுத்த பெருமாள்மலை பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், சித்திரை தேரோட்ட விழா, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று, காலை த்வஜாரோகணம் மலையில், திருக்கொடி ஏற்றி பரிவார ஸ்வாமிகளுடன் நகர் வலம் நடந்தது. காலை,11 மணிக்கு, இளைப்பாற்றி மண்டபத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, ஸ்வாமி பல்லக்கில் எழுந்தருளி, திருமலை சுற்றி வந்து கல்யாண மண்டபத்தில் பள்ளி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 10ம் தேதி, காலை, 8 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் கிரிவலம் வருதல், மாலை, 3 மணிக்கு, தேர் கலசம் வைத்தல், இரவு, 8 மணிக்கு, திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய தாரணம் நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி, காலை 6.30 மணிக்கு, இளைய பெருமாள் ஸ்வாமி ஸ்ரீதேவி, பூதேவி சமமேதராய் திருத்தேருக்கு ஸ்வாமி எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 3 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 13ம் தேதி, ஸ்வாமி பரிவாரங்களுடன் காவிரிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 3 மணிக்கு, பின்ன மரத்தில் ஸ்வாமி புறப்பாடு, இரவு, 10 மணிக்கு கொடி இறக்கம், அடுத்த நாள் அதிகாலை, 3 மணிக்கு, மேல் சத்தாபரணம், வாணவேடிக்கை, ஊஞ்சல் சேவை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14ம்தேதி அதிகாலை, 5 மணிக்கு மஞ்சள் நீராடி, பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.