பதிவு செய்த நாள்
08
மே
2014
01:05
சென்னிமலை: காங்கேயத்தில் உள்ள, ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவில், சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது. காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேவாங்கபுரம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா, கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஐந்தாம் தேதி, மாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும், ஆறாம் தேதி பால் குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகமும் நடந்தது. நேற்று, பழையகோட்டை சாலையில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவில் குளக்கரையில் இருந்து, பூவோடு எடுத்து வந்து, மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. ஏராளமான் பக்தர்கள், அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு வழிபாடும் நடந்தது