துறைமங்கலம் சிவசக்தி மகாமாரியம்மன் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2014 01:05
பெரம்பலூர்: துறைமங்கலம் கே.கே., நகரில் அமைந்துள்ள சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது. இவ்விழாவையொட்டி இன்று 9ம் தேதி இரவு 9 மணியளவில் சுவாமி குடியழைத்தல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. இதைத்தொடர்ந்து 10ம் தேதி மகா அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும், 11ம் தேதி கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும், திருக்கல்யாணம், அன்னதானம், பொங்கல், மாவிளக்கு, சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.