திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2014 12:05
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் நடைபெற்று வருகிறது. 7ம் நாள் உற்சவமான நேற்று காலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. அதை தொடர்ந்து, 6:30 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடும், 7:00 மணிக்கு வேதகிரீஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தன.