பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
உடுமலை : சின்ன வாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது; வரும் 15ல் நிறைவடைகிறது. உடுமலை அருகே சின்ன வாளவாடி, அமணசமுத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று காலை கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. இன்று இரவு 7.00 மணிக்கு சின்ன வாளவாடி பழையூரில் சக்தி அழைத்தலும், இரவு 10.00 மணிக்கு, அமணசமுத்திரத்தில் சக்தி அழைத்தலும் நடக்கிறது. நாளை காலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் இடம்பெறுகிறது. 7.00 மணிக்கு, மாவிளக்கு, பொங்கல் எடுத்தலும், மதியம் 2.00 மணிக்கு பூவோடு எடுத்தலும், இரவு 8.00 மணிக்கு கம்பம், சக்தி கும்பம் எடுக்கப்படுகிறது. வரும் 15ம் தேதி காலை 11.00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம், மஞ்சள் நீராட்டும், மதியம் 2.00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும் நடக்கின்றன. இரவு 8.00 மணிக்கு நடக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சியைக்காண ஏராளமானோர் பங்கேற்பர்.