பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
உடுமலை : உரல்பட்டி கமல காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா, இன்று துவங்கி 15ம் தேதி நிறைவடைகிறது. உடுமலை, உரல்பட்டியில் உள்ள கமல காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண உற்சவ திருவிழா, இன்று இரவு 9.00 மணிக்கு சக்தி கும்பம் அழைத்தலுடன் துவங்குகிறது. நாளை காலை 5.00 மணிக்கு, முளைப்பாலிகை எடுத்தலும், 7.00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு, திருக்கல்யாண சீர் கொண்டுவரப்படுகிறது. 1.00 மணிக்கு கமல காமாட்சி அம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு அன்னதானமும் இரவு 8.00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை 10.00 மணிக்கு, அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டும், மாலை 6.00 மணிக்கு, அபிேஷக பூஜையும், இரவு 8.00 மணிக்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.