பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயில் விழா, மே 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல், பூச்சப்பரம், தட்டு சப்பரத்தில் அம்மன் உலா நடந்தது. நேற்று நடந்த பூக்குழியில் இறங்குவதற்காக, ஆறு ஆயிரம் பேர், காப்பு கட்டினர். மாலை 3.30 மணிக்கு, அம்மன் நகர் சுற்றி வர, 3.45 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில், ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்த ராமலிங்கம், 45, அவரது உறவினர் கார்த்தீஸ்வரி, 34, குழந்தை தருணி, 3, மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி, 40, சங்கரலிங்கம், 40, காயம் அடைந்தனர். அருகில் இருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை 4.30 மணி முதல் மழை பெய்ய,மழையில் நனைந்தபடி, பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.