பதிவு செய்த நாள்
13
மே
2014
03:05
ஊத்துக்கோட்டை : சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில், தாசுகுப்பம் கிருஷ்ண மாரியம்மன் கோவில்களில், திருவிளக்கு பூஜை, நாளை நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் உருவ ரூபத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்தாண்டு, நாளை, 14ம் தேதி, 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இதேபோல், ஊத்துக்கோட்டை அடுத்த, தாசுகுப்பம் ஸ்ரீதேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலிலும், 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, நாளை, 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடைபெறுகிறது.