பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. கைலாசநாதர், ஆனந்தவள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பிரதோஷ பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு, பால், இளநீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. உற்சவர் பிரகார வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.