மயிலம்: கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் இன்று ஊரணி பொங்கல், தேர் திருவிழா நடக்கிறது. மயிலம் அடுத்த கொரளூர் கிராமத்திலுள்ள பொன்னியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடக்கிறது. இரவில் மின் விளக்குகளால் அலங்கரித்த உற்சவர் வீதியுலா காட்சி நடக்கிறது. இன்று (13ம்தேதி) மாலை 4 மணிக்கு கிராம மக்கள் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படை யலிடுவர். இரவு 7 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அலங்கரித்த தேரில் அம்மன் வீதியுலா காட்சி நடக்கிறது. ஒரு வாரமாக மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கிராம எல்லையில் பூஜை செய்வார்கள். 14ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.