பாகனேரி : பாகனேரி, பாரத விநாயகர் கோவிலில், பூக்குழி விழா நடந்தது. மே-1ல் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. தினமும் விநாயகர், முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பத்து நாட்கள் நடந்த விழாவின், பத்தாம் நாளன்று காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி செலத்தினர். அதை தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை வரம் வேண்டி, தம்பதியர் கரும்பு தொட்டில் கட்டி பிரகாரத்தை சுற்றி வந்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.