காரைக்குடி : காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் பெருந்திருவிழா,இன்று காலை 6.18 மணி முதல் 8.23 மணிக்குள், காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் உலா வருகிறார். எட்டாம் விழாவன்று, தேரோட்டம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு, தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் காலை 9 மணிக்கு, காட்டம்மன் கோயிலிலிருந்து, கொப்புடையம்மன் கோயிலுக்கு, தேர் திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.