டில்லி சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலில் மங்கோலியா ஜனாதிபதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2025 11:10
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
மங்கோலியா ஜனாதிபதி குரேல்சுக் உக்னா இந்தியாவிற்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா வந்த மங்கோலியா ஜனாதிபதிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் டில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்தார். இந்தியாவின் கம்பீரமான கலை, கட்டிடக்கலை கண்டு வியந்தனர். இந்த வருகை மங்கோலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.