முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2025 10:10
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் கொடிக்கு பூஜை செய்து கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். முக்கிய நிகழ்வாக அக்.,21ல் அம்மன் கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், 22ல் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு, பால்குடம்,23ல் கருப்பண்ண சுவாமி கோயில் முன் பொங்கல் வைத்து முளைப்பாரி ஊர்வலம், 24ல் பெருமாள் கோயில் முன் பொங்கல் வழிபாடு, 25 மதியம் 3:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, நகர்வலம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.