ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் மகாசத்தையனார் கோயில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொண்டி: தொண்டி அருகே முகிழ்த்தகம் சித்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.