கோவில்பட்டி: கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றன. நேற்று செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றன. பூச்சட்டிகள், 21 அக்னிச் சட்டி, 54 அக்னிச் சட்டி எடுத்து நகர்வலம் வருதலும் இன்று பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.