புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 6-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன், பரிவார தெய்வங்களுடன் மண்டாகபடிதாரர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழா முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம், காவடி எடுத்து வந்தும், மாவிளக்கு வைத்தும்,கிடா,கோழி பலியிட்டும் வழிபட்டனர். திருவீதி உலா நடைபெற்றது.