பூவரசன்குப்பம் கோவிலில் லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2014 03:05
கடலூர்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி, நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி மற்றும் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் துவங்கியது. இதில் நரசிம்மர், சுதர்சன, தன்வந்திரி, பஞ்சசுத்த, கருட மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டது. பகல் 12:00 மணிக்கு வசுத்தரா ஹோமமும், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பூவரசன்குப்பம் கிராம வாசிகள் செய்திருந்தனர்.