மயிலம்: மயிலம் கன்னியம் மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு மயிலம் மலையடிவாரத்தி லுள்ள மயிலாடும் பாறை அருகில் பூங்கரகம், கன்னியம் மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மயிலம் ஜெ.ஜெ.,நகரில் உள்ள அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பிற்பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு கிராம பழங்குடி இன மக்கள் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.