பதிவு செய்த நாள்
15
மே
2014
02:05
உடுமலை : உடுமலை காமாட்சியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், உரல்பட்டி கமல காமாட்சி அம்மன் மற்றும் சின்ன வாளவாடி மாரியம்மன் கோவில்களில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, தீர்த்தம் மற்றும் பால் குடம் கொண்டு வரப்பட்டது. விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், காலை 10.00 மணிக்கு விசாலாட்சி அம்மனுக்கும் விஸ்வநாதர் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது; மாலை அம்மன் வீதியுலா நடந்தது. சின்ன வாளவாடி, அமணசமுத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 6.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம் 2.00 மணிக்கு, அம்மன் வீதியுலா இடம்பெற்றது. உடுமலை, உரல்பட்டியில் உள்ள கமல காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண உற்சவ திருவிழாவில், நேற்று காலை 9.00 மணிக்கு, திருக்கல்யாண சீர் கொண்டுவரப்பட்டு, கமல காமாட்சி அம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. உடுமலை, நேரு வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் நேற்று காலை அம்மனுக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு, வானவேடிக்கை, மேளதாளங்களுடன் அம்மன் வீதியுலாவும், இரவு 8.30 மணிக்கு, பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நேற்று நடந்தது.