கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேப்பள்ளி ஊராட்சி, முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோயிலில் 40-ம் ஆண்டு மகாபாரத மகா உற்சவ விழா கடந்த மாதம் 27-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று கோயில் வளாகத்தில் மகாபார சொற்பொழிவும், மகா பாரத நாடகங்களும் நடைபெற்று வந்தன.முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் பலர் பார்த்தனர். .