உலகிலேயே அதிக குழந்தைகளைப் பெற்ற தாய் வரிசையில் காந்தாரியும் இருக்கிறாள். மகாபாரதத்தின் முக்கிய பாத்திரமான இவள், கவுரவ குல அரசன் திருதராஷ்டிரனை திருமணம் செய்தாள். தன் கணவர் பார்வையற்றவர் என்பதால், பதிவிரதா தன்மையை கடைபிடித்த இவள், தனது கண்களையும் கட்டிக் கொண்டாள். இவள் காந்தார நாட்டு மன்னன் ஸ்ரீபாலாவின் மகள். நாட்டின் பெயரை இவளுக்கு இவளது தந்தை சூட்டினார். வேத வியாசரிடம் பெற்ற வரத்தின் படி, தன் வயிற்றில் வளர்ந்த கருவை அடித்து உடைக்க, அது 101 பிண்டங்களாக பிரிந்தது. இதில் துரியோதனன் உள்ளிட்ட 100 ஆண்மக்களும், துஷ்சலா என்ற மகளும் அடங்குவர்.