கடலூர் : கடலூர், புதுப்பாளையம் கல்யாண ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று 18ம் தேதி காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை, மகா கணபதி ஹோமம், சாஸ்தா மூலமந்திர ஹோமம், மகா தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை கரகம் எடுத்தல், விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை, மாலை 3:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை ஊரணி பொங்கல் வைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு வீரன் படையல் நிகழ்ச்சி நடக்கிறது.